சிக்ஸர் அடிக்கும் ப்ருத்விராஜ்-பிரியாமணி

247

பிருத்விராஜ் மலையாளத்தில் அடுத்ததாக நடிக்க இருக்கும் படங்களில் ஒன்றுதான் ‘பெயிண்ட்டிங் லைஃப்’. இந்தப்படத்தை இயக்கும் டாக்டர்.பைஜு, ஏற்கனவே பிருத்விராஜை வைத்து இரண்டு படங்களை இயக்கியவர் தான். அதுமட்டுமல்ல இவர் இதுவரை இயக்கிய நான்கு படங்களின் மூலம் உலக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளையும் அள்ளிக்குவித்தவர்.

இந்த ‘பெயிண்ட்டிங் லைஃப்’ படத்தில் பிருத்விராஜுக்கு ஜோடியாக பிரியாமணி நடிக்கிறார். மலையாளத்தில் மூன்று, தமிழில் இரண்டு என இவர்கள் இருவரும் ஏற்கனவே ஐந்து படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்தப்படம் இவர்கள் சேர்ந்து அடிக்கப்போகும் சிக்ஸர் ஆகும்.

இந்தப்படத்தில் பிருத்விராஜ் திரைப்பட இயக்குனராகவும் பிரியாமணி ஒரு டூரிஸ்ட் ஆகவும் நடிக்கிறார்கள். ஒரு கிராமத்தில் சந்திக்கும் இவர்கள் இருவரின் வாழ்க்கையில், அதன்பின் ஏற்படும் மாற்றங்களைத்தான் அழகான ‘பெயிண்ட்டிங் லைஃப்’ ஆக மாற்ற இருக்கிறார் டாக்டர்.பைஜு

1 Comment
  1. เทปใส says

    996644 600994I besides believe therefore , perfectly composed post! . 914973

Leave A Reply

Your email address will not be published.