நடிகை ஸ்ரீதேவிக்கு மும்பை அந்தேரி பகுதியில் மற்றொரு வீடும் இருக்கிறது. ஆனால் அந்த வீட்டில் இப்போது நம்ம பிரபுதேவா தான் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். ஸ்ரீதேவி அந்த வீட்டிலிருந்து, தான் கட்டிய புதிய பங்களாவுக்கு மாறிய நேரத்தில் மும்பையில் நல்ல வீடாக வாடகைக்கு வீடு தேடிக்கொண்டிருந்த பிரபுதேவாவிடம் தனது வீட்டை ஒப்படைத்தார்.
சமீபத்தில் நடிகை ஸ்ரீதேவியின் பங்களாவில் தீப்பிடித்த சம்பவத்தால் தற்போது ஸ்ரீதேவியின் வீட்டில் தீப்பிடித்த சம்பவத்தால் அவரும் அவரது குழந்தைகளும் தனித்தனியாக இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதைப் பார்த்து மிகவும் வருத்தப்பட்டுள்ளார் பிரபுதேவா.
அந்த வீட்டின் சீரமைப்பு வேலைகள் முடிந்து மீண்டும் அங்கே செல்ல நிறைய நாட்கள் ஆகும் என்பதால் தற்போது தான் குடியிருக்கும் வீட்டிற்கே மீண்டும் வந்துவிடுமாறு ஸ்ரீதேவிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தனக்கு மும்பையில் இன்னொரு வீடு எளிதாக கிடைக்கும் என்றும் ஆனால் ஸ்ரீதேவிக்கு அவர்களது சொந்த வீடுபோல வேறு எதுவும் அமையாது என்றும் அதற்கான காரணமாக குறிப்பிட்டுள்ளார் பிரபுதேவா.