‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்திற்கு பிறகு சினிமாவில் குறும்பட இயக்குனர்கள் மீதான வெளிச்சம் அதிகமாகியுள்ளது. அந்த வரிசையில் தற்போது சேர்ந்திருப்பவர் தான் அருண்குமார். இவர், தான் ஏற்கனவே எடுத்துள்ள குறும்படத்தை தழுவி ‘பண்ணையாரும் பத்மினியும்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
பண்ணையார் ஒருவர் பியட் நிறுவனத்தின் பத்மினி மாடல் கார் மீது கொண்ட மோகத்தினை மையமாக வைத்து காமெடி படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் பண்ணையாராக ஜெயபிரகாஷும், அவரது மகளாக சினேகாவும் நடித்துள்ளனர். அவரிடம் வேலைக்கு சேரும் ட்ரைவராக விஜய் சேதுபதி நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படத்தை பார்த்த தணிக்கைக்குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.