இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் சிஷ்யரான இயக்குனர் அமீர்ஜான், உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.. பாலச்சந்தர் தயாரித்து 1984ல் வெளியான ‘பூவிலங்கு’ படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமானார். அதில் தான் நடிகர் முரளி, குயிலி மற்றும் ‘பூவிலங்கு’ மோகன் ஆகியோரை தமிழில் அறிமுகப்படுத்தினார் அமீர்ஜான். அதுமட்டுமல்ல சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ‘சிவா’ படத்தையும் இயக்கினார். பெரும்பாலும் முரளி, கார்த்திக் இவர்கள் நடித்த படங்களையே மாறி மாறி இயக்கினார்.
7௦ வயதான இவருக்கு 20 நாட்களுக்கு முன்பு மாராடைப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பிய அமீர்ஜான் இரண்டு நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். ஆனால், இன்று மீண்டும் அதிகாலை மூச்சு திணறல் ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் வருவதற்குள்ளாகவே காலமானார். அமீர்ஜானை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நமது ‘behind frames’ தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.
Comments are closed.