
சிறுவயதில் கோடைவிடுமுறையில் பூவரசம் இலையில் பீப்பி செய்து ஊதுவதும், பொன்வண்டு பிடிப்பதும், காத்தாடி விடுவதுமாக இருக்கும் குழந்தைகள் திடீரென ஒரு வன்முறையை காண நேரிட்டால் அதன்மூலம் அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலும், அதை அவர்கள் எப்படி கையாண்டார்கள் என்பதும் தான் ‘பூவரசம் பீப்பி’யின் கதை..
இந்தப்படத்தின் சிறப்பே பிரபல ஒளிப்பதிவாளரான மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருப்பதுடன் இந்தப்படத்தையும் அவரே தயாரித்திருப்பதுதான். மிஷ்கின், சமுத்திரகனி ஆகியோரிடம் உதவி இயக்குனராக வேலைபார்த்த ஹலிதா ஷமீம் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் . படத்தொகுப்பும் பாடல்களும் கூட அவரே.
பட்டாபட்டி’, ‘பட்டய கிளப்பணும் பாண்டியா’ போன்ற படங்களுக்கு இசையமைத்த அருள்தேவ் இந்தப்படத்துக்கு இசையமைக்க, ஏர்டெல் சூப்பர் சிங்கரில் கலக்கிய ஆஜித் இதில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். நிறைய குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்தப்படத்தில் சமுத்திரகனியும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
Comments are closed.