லயோலாவில் ‘பூஜை’ இசை வெளியீடு..! வெளிப்பட்டது விஷாலின் சுயநலம்..!!

73

ஹரி-விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் ‘பூஜை’. விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இவர்களுடன் சத்யராஜ், சூரி உட்பட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா லயோலா கல்லூரியில் நடைபெற்றது.

கடந்த வருடம் சொந்தமாக பட நிறுவனம் தொடங்கிய பிறகு தனது முதல் தயாரிப்பான ‘பாண்டிய நாடு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் இங்கே தான் நடத்தினார் விஷால்.. தொடர்ந்து லயோலாவில் இந்த விழாக்களை நடத்துவதற்கு தன்னுடைய சுயநலம் தான் காரணம் என்று இசை வெளியீட்டு விழாவில் கூறினார் விஷால்.

“பலரும் புத்துணர்ச்சி பெறுவதற்காக ‘பியூட்டி ஸ்பா’ போன்ற இடங்களுக்கு செல்வார்கள்.. ஆனால் எனக்கு புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய இடம் என்றால் அது நான் படித்த இந்த லயோலா கல்லூரி தான். ஒருவகையில் நான் இந்த விழாவை இங்கு நடத்துவது சுயநலம் தான்”. காரணம் இங்குள்ள மாணவர்களை பார்க்கும்போது எனக்கு எனர்ஜி இன்னும் அதிகமாகிறது..” என்று விஷால் பேச மாணவர்களிடம் மிகப்பெரிய ஆரவாரம் .எழுந்தது.

Comments are closed.