ஒரு அறிமுக இயக்குனர், குழந்தைகள் சப்ஜெக்ட்டை தனது முதல்படமாக எடுத்தால் அது ஓடாது என்கிற செண்டிமென்ட் தமிழ்சினிமாவில் இப்போதும் உண்டு. அனால் நல்ல கதை இருந்தால் எதைப்பற்றியும் கவலைப்பட தேவையில்லை என, தனது முதல் படத்தை குழந்தைகளை மையமாக வைத்து உருவாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் கல்யாண்.
படத்தின் பெயர் ‘கத சொல்ல போறோம்’. ஆடுகளம் நரேன் மற்றும் நகைச்சுவை நடிகர் காளி வெங்கட் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பவன் இசையமைத்துள்ளார். புதுமுகங்கள் நடிக்கும் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று கமலா திரையரங்கில் நடைபெற்றது.. இந்த விழாவில் விதார்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்திப்பேசினார்.
Comments are closed.