‘உளவுத்துறை’, ‘ஜனனம்’ ஆகிய படங்களை இயக்கிய ரமேஷ் செல்வன் சத்யராஜை வைத்து இயக்கியுள்ள படம் தான் ‘கலவரம்’. அரசியல் பிரமுகர்கள், ஜாதித் தலைவர்கள், மதத் தலைவர்கள், இவர்கள் எல்லாம் தங்களின் சுயநலத்திற்காக ஏற்படுத்தும் பிரச்சினைகளும், போராட்டங்களும் பொதுமக்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பதை எடுத்துச் சொல்லும் இந்தப் படத்தில், நேர்மையான விசாரணை அதிகாரியாக சத்யராஜ் நடிக்கிறார்.
‘கலவரம்’ வன்முறை படமா என்று கேட்டால், “அப்படியெல்லாம் இல்லை.., கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலையை கண்முன் நிறுத்தும் ஒரு முயற்சி தான் இந்தத் திரைப்படம். இதில் உண்மைக்கு மிக நெருக்கமாக பயணிப்பதே இந்த படத்தின் திரைக்கதையின் சிறப்பு” என்கிறார் இயக்குனர் ரமேஷ் செல்வன்.
படம் தயாராகி நீண்ட நாட்களாகியும் வெளியிடமுடியாத சூழல் இருந்தது. தற்போது ரிலீஸிற்கான வேலைகளை துரிதப்படுத்தி ‘ஜில்லா’, ‘வீரம்’ ஆகிய படங்களுடன் பொங்கல் வெளியீடாக இந்தப்படத்தை திரைக்கு கொண்டுவர தீர்மானித்திருக்கிறார்கள்.