‘போடா போடி’ இயக்குனரின் படத்தில் கௌதம் கார்த்திக்

122

சிம்பு, வரலட்சுமி நடித்த போடா போடி’ திரைப்படத்தை இயக்கிய விஷ்ணு சிவன் தனது அடுத்த் படத்தை இயக்க கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு ஸ்கிரிப்ட்டில் கவனம் செலுத்திவந்தார். இப்போது ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்து, கௌதம் கார்த்திக்கை ஹீரோவாக வைத்து புதிய படத்தை ஆரம்பித்துவிட்டார்.

படத்தின் பெயர் ‘நானும் ரௌடிதான்’. இயக்குனர் கௌதம் மேனன் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் இந்தப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் அனிருத் தான். ஆனால் இப்போது கௌதம் கார்த்திக்கிற்கு கதை செட்டாகவே அவரை ஹீரோவாக ஒப்பந்தம் செய்துவிட்டார் விக்னேஷ் சிவன். இதன் படப்பிடிப்பு வரும் ஜனவரி-14ல் துவங்குகிறது.

1 Comment
  1. Fawn_J says

    Very interesting subject, regards for putting up.Blog range

Leave A Reply

Your email address will not be published.