“தாரே ஜமீன் பர்’ படம் வேறு.. ‘பசங்க-2’ வேறு” – பாண்டிராஜ்..!

303

pasanga 2 stills
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பசங்க-2’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. சூர்யா முக்கியமான வேடத்தில் நடித்திருப்பதால் படம் குறித்த ஆவல் ரசிகர்களிடம் இயல்பாகவே எழுந்துள்ளது ஆனால் சமீபத்தில் வெளியான ‘பசங்க 2′ ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு ‘தாரே ஜமீன் பர்’ படம் போல இருக்கிறதே என்று சிலர் சொல்லிவருவதை கேட்டால் சிரிக்கிறார் பாண்டிராஜ்.

“என்னுடைய பசங்க’ படத்தின் ட்ரெய்லரில் கொஞ்சம் சண்டைக் காட்சிகள் எல்லாம் வைத்திருந்தேன். அப்போது அதைப் பார்த்து விட்டு பலரும் ‘சிட்டி ஆப் காட்’’ படத்தை எடுத்துவிட்டார் என்றார்கள். ஆனால் படம் பார்த்துவிட்டு, சம்பந்தமே இல்லை என்று கருத்து தெரிவித்தார்கள். அதே போலத் தான் ‘பசங்க 2’ ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு ‘தாரே ஜமீன் பர்’ என்கிறார்கள்.

அந்தப்படத்துக்கும் என் படத்துக்கும் துளிகூட சம்பந்தமே இல்லை. அப்படத்தில் அமீர்கான், இந்தப்படத்தில் சூர்யா சார் என்பதால் தான் ஒருவேளை இப்படி சொல்கிறார்களோ என்னவோ. ‘பசங்க 2’ படம் வெளியானபின் பார்த்துவிட்டு, “அய்யோ.. இது வேற படம்” என்று கண்டிப்பாக சொல்வார்கள்” என சர்ச்சைக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் பாண்டிராஜ்.

Comments are closed.