இயக்குநர் ரஞ்சித். இயக்குநர் ராமிடம் இணை இயக்குநராக பணிபுரிந்து வரும் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் ‘பரியேறும் பெருமாள்’.. ‘காலா’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போதே, நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் இந்தப்படத்தை தயாரிக்கத் தொடங்கினார் பா.ரஞ்சித்
திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதியை சார்ந்த ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. நெல்லை மாவட்ட இளைஞராக கதிர் நடிக்க, அவருக்கு நாயகியாக ஆனந்தி நடித்திருக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வரும் வேளையில் இயக்குநர் ரஞ்சித், இயக்குநர் ராம் மற்றும் சந்தோஷ் நாராயணன் மூவரும் இணைந்து இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
மார்ச் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது

Comments are closed.