நகர்வலம் வர ஆரம்பித்த ஓவியா..!

236

oviya meet fans

எவ்வளவு பெரிய வலிமையான இதயம் கொண்டவர்களையும் பலத்தால் வெல்ல முடியாதபோது, காதல் அதை எளிதாக செய்துவிடும் என்பார்கள்.. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஓவியா விஷயத்தில் இது சரியாக பொருந்தும்.. அந்த வீட்டில் தனக்கிருந்த அத்தனை எதிர்ப்புகளையும் ஜஸ்ட் லைக் தட் சமாளித்த ஓவியா, ஆரவ்வின் காதல் வலையில் சிக்கியதால் அடியோடு மாறிப்போனார்.

அதன் காரணமாகவே மன அழுத்தத்திற்கு ஆளான ஓவியா, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். ஆனாலும் .ஓவியாவின் மீதான மதிப்பும் ரசிகர்களின் பாசமும் இன்னும் அதிகமாகவே செய்திருகிறதே தவிர குறையவில்லை. இந்தநிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஓவியா சென்னையில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்றார்..

இதுநாள் வரை தாங்கள் டிவியில் ஆதரவளித்த ஓவியா, நேரில் வந்ததை பார்த்ததும் ரசிகர்கள் அவருடன் உற்சாகமாக பேசி, புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.. ஓவியாவும் அவர்களிடம் கலகலப்பாக பேசி புகைப்படம் எடுக்கும் வரை பொறுமை காட்டி அசத்தினார்

Comments are closed.