“வயதானவராக நடித்தது இமேஜை பாதிக்காது” – விஜய்சேதுபதி..!

201

‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தின் ட்ரெய்லரை பார்த்தவர்களுக்கு விஜய்சேதுபதி வயதான கெட்டப்பில் நடித்ததை விட, அவர் போடும் குத்தாட்டம் தான் இன்னும் ஆச்சர்யப்படுத்தி இருக்கும். படத்தின் இயக்குனர் பிஜு விஸ்வநாத்தும், விஜய்சேதுபதியும் ‘பீட்சா’வுக்கு முன்பிருந்தே நண்பர்கள்.. அதனால், தானே தயாரிப்பாளராக மாறி இந்தப்படத்தை தயாரித்துள்ள விஜய்சேதுபதி, படத்தின் வசனத்தையும் எழுதி புருவம் உயர்த்த வைத்துள்ளார்.

இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது படம் குறித்த கேள்விகளுக்கு கவனமாக பதிலளித்த விஜய்சேதுபதி, “எனக்கென்ன இமேஜ் இருக்கிறது கெட்டுப்போவதற்கு..? இந்தப்படத்தில் வயதான கேரக்டரில் நடிக்க ஆள் தேடினோம். கிடைக்கவில்லை.. சரி நானே நடிக்கலாம் என மேக்கப் போட்டு பார்த்தேன். இயக்குனரும் ஒகே சொல்லிவிட்டதால் தைரியம் வந்துவிட்டது” என்றார்.

இந்தப்படத்தின் சில காட்சிகளை பார்க்கும்போது விஜய்சேதுபதி நன்றாக குண்டடித்துவிட்டது போல தெரிகிறது.. “ஏற்கனவே கொஞ்சம் தொப்பை இருக்குது எனக்கு.. படத்துக்காக கொஞ்சம் எக்ஸ்ட்ராவா தொப்பை போட்டிருக்கேன்” என்கிறார் தொப்பை போடுவது ஏதோ சாதாரண விஷயம் போல.

படத்தின் இரண்டு சக (கதா)நாயகர்களாக நடித்திருக்கும் ரமேஷ் திலக்கும் ஆறுமுகம் பாலாவும் வயதான நோயாளியான விஜய்சேதுபதிஇடம் மாட்டிக்கொண்டு முழிப்பது தான் படத்தின் கதை. ரமேஷ் திலக்கின் ஜோடியாக ஆஸ்ரிதா நடித்துள்ளார். வரும் 31ஆம் தேதி ஆரஞ்சு மிட்டாய் ரிலீஸ் ஆகிறது.

Comments are closed.