மூன்றே நாளில் 150 கோடியை அள்ளிய ‘பாகுபலி’..!

266

சாதனை என்பதே முறியடிக்கப்படுவதற்காகத்தானே. அதைத்தான் ராஜமவுலியின் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான ‘பாகுபலி’யும் இம்மி பிசகாமல் செய்து வருகிறது. வெளியான மூன்றே நாட்களில் 155 கோடி கலெக்சன் என்பது இதுவரை பாலிவுட் படங்களே கண்டதில்லை.. ஆனால் அசால்ட்டாக அடித்து சாய்த்திருக்கிறது ‘பாகுபலி’.

அதுமட்டுமல்ல இந்தியில் இதுவரை டப்பிங் படங்களின் அதிகபட்ச வசூல் ரெக்கார்ட் ஷங்கர்-ரஜினி கூட்டணியின் ‘எந்திரன்’ வசம் தான் இருந்தது.. அதையும் ‘பாகுபலி’ இப்போது தன வசப்படுத்திக்கொண்டுள்ளது. இந்தி முன்னணி நாயகர்கள் ராஜமவுலியின் மேக்கிங்கில் ஸ்தம்பித்து போய் நிற்கிறார்கள்.

அவ்வளவு ஏன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவே, தெலுங்கு சினிமாவிற்கு உலக அளவில் வரவேற்பு ஏற்படுத்தி கொடுத்துவிட்டீர்கள் என ராஜமவுலி டீமிற்கு பாராட்டு பத்திரம் வாசித்துள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.. இதேபோக்கில் போனால் 200 கோடி கிளப்பில் நாளையோ, நாளை மறுநாளோ முதல் இடத்தில் பாகுபலி’ அமர்ந்துவிடும் என்பது உறுதி.

Comments are closed.