விடுதலைப்புலிகளை பற்றி மீண்டும் ஒரு படம்..!

245

ரட்சகன், ஸ்டார், ஜோடி ஆகிய படங்களை இயக்கிய பிரவீன் காந்தி ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும் இயக்கியுள்ள படம்தான் ‘புலிப்பார்வை’.. ஆம். விடுதலைப்புலிகளைப்ப்றிய இன்னொரு படம் தான் இது. இதுவரை பல படங்கள் விடுதலைப்புலிகள் பற்றி வந்தாலும் இது இன்னும் கொஞ்சம் அழுத்தமாக ஈழத்தமிழர்களின் உணர்வுகளையும் விடுதலைப்புலிகளின் இறுதி நாட்களையும் சொல்லும்விதமாக படமாக்கப்பட்டிருக்கிறதாம்.

தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் மரணம் உலகையே உலுக்கிய ஒன்று. அந்த கொடிய சம்பவத்தை மையக்கருவாகவும் பாலச்சந்திரனை மையமாகவும் வைத்து இந்தப்படத்தின் கதையை பின்னியிருக்கிறார் இயக்குனர் பிரவீன் காந்தி.. இதற்காக பாலச்சந்திரன் போல உருவ அமைப்பு கொண்ட நூறு பையன்களை வரவழைத்து அதில் இருந்து சத்தியதேவ் என்கிற பையனை நடிக்கவைத்துள்ளார்களாம். வேந்தர் மூவிஸ் சார்பாக மதன் இந்தப்படத்தை தயாரித்துள்ளார்.

Comments are closed.