இந்தமுறை எதுவும் மிஸ்ஸாகிவிடக்கூடாது என படு கவனமாக தான் இயக்கிவரும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை பார்த்துப் பார்த்து செதுக்கிவருகிறார் இயக்குனர் மிஸ்கின். தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான லோன் வுல்ஃப் புரடக்ஷன்ஸ் மூலமாக இந்தப்படத்தை தயாரிக்கும் மிஸ்கின் இந்தப்படத்தில் பிரதான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
படத்திற்கு இசைஞானி இளையராஜா பின்னணி இசையமைப்பதால் இன்னும் கூடுதல் தெம்புடன் இருக்கிறார் மிஸ்கின். சில நாட்களுக்கு முன்னாடி மிரட்டலான ட்ரெய்லர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை புருவம் உயர்த்தவைத்த மிஸ்கின் விரைவில் இந்தப்படத்தின் இன்னோரு டீஸரையும் வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கப் போகிறார்.