தீபாவளி அன்றே ‘ஹேப்பி நியூ இயர்’ சொல்கிறார் ஷாருக்கான்..!

105

 

‘சென்னை எக்ஸ்பிரஸ்’ தமிழ் வெர்ஷன் புண்ணியத்தில் கோலிவுட்டிற்கு அதிரடி என்ட்ரி கொடுத்து வீட்டுக்கு வீடு தாய்க்குலங்கள்  மத்தியில் நன்றாக ஊடுருவி விட்டார் ஷாருக்.. சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவார் ஷாருக்கான். கூடவே தீபிகா படுகோனையும் கூட்டிக்கொண்டு வந்தால் கேட்கவா வேண்டும்..?

இப்போது இந்த ரூட்டை இப்போது கெட்டியாக பிடித்துக்கொண்டார் ஷாருக்கான். தற்போது ஷாருக்-தீபிகா காம்பினேஷனில் அடுத்ததாக உருவாக்கி வரும் படம் தான் ‘ஹேப்பி நியூ இயர்’. ஷாருக்கானின் பேவரைட் இயக்குனரான பாராகான் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் அபிஷேக் பச்சனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்தப்படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருக்கும் ஷாருக்கான், ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தை போலவே இந்தப்படத்தையும் தமிழிலும் வெளியிட முடிவு செய்திருக்கிறார். அதனாலேயே சென்னையில் இந்தப்படத்திற்கான ஆடியோ ரிலீஸையும் பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளார் ஷாருக். இதற்காக வரும் அக்டோபர்-3ஆம் தேதி சென்னைக்கு வருகிறார்கள் ஷாருக்-தீபிகா சூப்பர் ஜோடி.

Comments are closed.