இப்ப தமன்னாவும் ஒரு பாட்டுக்கு ஆடுறாருங்கோ..!

135

தெலுங்கில் தமன்னாவின் கைவசம் இப்போது இரண்டு இல்லையில்லை.. மூன்று படங்கள் உள்ளன. ஒன்று மகேஷ்பாபுவின் ஜோடியாக நடித்துவரும் ‘ஆகடு’. இரண்டாவது எஸ்.எஸ்.ராஜமௌலியின் டைரக்‌ஷனில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துவரும் ‘பாஹுபலி’.

இதைத்தாண்டி மூன்றாவதாக பிரபல இயக்குனர் வி.வி.விநாயக் டைரக்‌ஷனில் நடிக்கிறார்.. ஸாரி.. ஒரே ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடுகிறார். இரண்டு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே இன்னொரு படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடுவதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். அது தமன்னாவிற்கு இருக்கிறது.

தமன்னா இதற்கு எப்படி சம்மதித்தார் என்பதற்கு அவரது தந்தை ஒரு சூப்பரான விளக்கம் கொடுத்திருக்கிறார். “ஒரு வருடத்திற்கு முன் இந்தக்கதையை விநாயக் சொன்னபோது அதில் முக்கியமான வேடம் தமனாவுக்கு ஒதுக்கப்படுவதாகத்தான் இருந்தது. ஆனால் பின்னர் கதையை மாற்றிய விநாயக் இந்தப்படத்தில் இடம்பெறும் முக்கியமான பாடலுக்கு மட்டும் தமன்னா ஆடினால் நன்றாக இருக்கும் என்று சொல்லி அதை எப்படி படமாக்கப் போகிறேன் என்றும் விவரித்தார். அதன்பின்னர்தான் சம்மதித்தோம்” என்கிறார்.

மேலும் “இது ஐட்டம் டான்ஸ் இல்லை.. படத்தின் ஹீரோ ஸ்ரீனிவாஸுடன் சேர்ந்து ஆடும் ரொமாண்டிக் டான்ஸ் தான். அதுமட்டும் இல்லாமல் கதைக்கு முக்கியமானதாக இந்த டான்ஸ் இருப்பதால்தான் ஒத்துக்கொண்டோம்” என்றும் கூறியுள்ளார். ஒரு பாடலுக்கு ஆடினால் அதற்கு எப்படியெல்லாம் காரணம் சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கிறது பார்த்தீர்களா..?

Comments are closed.