“விஷாலின் கேரக்டருக்கு முன்னுதாரணம் இல்லை” – இயக்குனர் திரு

208

இப்போது கதாநாயகனை மட்டுமே முன்னிறுத்தும் படங்கள் ஓடுவதில்லை என்பதும், சினிமாவின் போக்கு மாறியுள்ளது என்பதையும் ‘பாண்டியநாடு’ வெற்றிக்குப்பின் விஷால் நன்கு உணர்ந்திருக்கிறார். அதனாலோ என்னவோ தற்போது நடித்துவரும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் புதுரத்தம் பாய்ந்த உற்சாக மனிதராகிவிட்டார் விஷால்.

‘பாண்டியநாடு’ படத்தை தொடர்ந்து விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் அடுத்த படம் தான் ‘நான் சிகப்பு மனிதன்’. விஷாலுடன் யுடிவியும் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
ஒரு மனிதனின் ஆசைகள் பற்றிய கதைதான் ‘நான் சிகப்பு மனிதன்’. நாயகன் என்ன ஆசைப்படுகிறான். அதைநோக்கிச் செல்லும்போது என்னென்ன தடைகள் வருகின்றன? எல்லாவற்றையும் மீறி எப்படி தடைகளை எதிர்கொண்டு தனது ஆசையை அடைகிறான் என்பதே படத்தின் கதை என்கிறார் இயக்குனர் திரு

“இந்தப்படத்தில் விஷாலின் கதாபாத்திரம் புதிது.. இதை வழக்கமான பில்ட்-அப்புக்காக மட்டும் சொல்லவில்லை. சினிமாவில் போலீஸ் முதல் பொறுக்கி வரை ரொம்ப நல்லவன், துரோகி, விரோதி எல்லாவற்றுக்கும் முன் உதாரணங்கள் உண்டு. ஆனால் இந்தப்படத்தில் விஷால் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்துக்கு எந்த முன் மாதிரியும் இல்லை. காரணம் கதை புதிது.. கதாபாத்திரம் புதிது” என்கிறார் படத்தின் இயக்குனர் திரு.

‘பாண்டியநாடு’ படத்தின் மூலம் விஷாலுக்கு ராசியான ஜோடியாக மாறியுள்ள லட்சுமி மேனனுக்கு இதில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொண்ட வேடம். அதுவும் தவிர கதையின் முக்கியத்துவம் கருதி முத்தக்காட்சிக்கும் சம்மதித்து நடித்துள்ளாராம் லட்சுமி மேனன்.

Leave A Reply

Your email address will not be published.