‘ஆதிபகவன்’ படத்திற்கு பிறகு ‘ஜெயம்’ ரவி நடித்துவரும் படம் தான் ‘நிமிர்ந்து நில்’. ‘இந்தப்படம் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற இருக்கும் பெர்லின் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள இருக்கிறது. போராளி’ படத்திற்கு பிறகு சமுத்திரக்கனி இயக்கும் இந்தப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக அமலா பால், மேக்னா ராஜ் இருவரும் நடிக்கிறார்கள்.
‘ஆதிபகவன்’ படத்தை தொடர்ந்து இந்தப்படத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் ஜெயம் ரவி. குறிப்பாக 48 வயதான நரசிம்ம ரெட்டியாக நடித்திருக்கும் இவரது கதாபாத்திரம் மிரட்டலாக இருக்குமாம். அதுமட்டுமின்றி சரத்குமார், விஜய் டிவி கோபிநாத் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப்படத்தை வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் தெலுங்குப்பதிப்பான ‘ஜண்டாபாய் கபிராஜூ’வில் நானி ஹீரோவாக நடிக்கிறார். இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
இந்தப்படம் பெர்லின் திரைப்படவிழாவில் திரையிடப்படுவதைக் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சமுத்திரக்கனி, “இந்தப்படம் உலகத்திரைப்பட விழாக்களில் முக்கியமானதாக கருதப்படும் பெர்லின் திரைப்பட விழாவில் கலந்து கொள்வது என்பதே எங்கள் டீமிற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்” என்கிறார் உற்சாகத்துடன்.
“நிமிர்ந்து நில்” என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு படம் .அந்த படத்தின் தரத்துக்கு ஏற்ப, படத்துக்கு இத்தகைய அங்கீகாரமும், பாராட்டும் கிடைத்து இருப்பது மகிழ்ச்சி தருகிறது. புது வருடம் எனக்கு இனிமையாக அமைய உள்ளது, மேலும் நல்ல சேதிகள் இந்த வருடம் வர போவது நிச்சயம்” என்கிற ஜெயம் ரவி ரசிகர்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.