‘ஆதிபகவன்’ படத்திற்கு பிறகு ‘ஜெயம்’ ரவி நடித்துவரும் படம் தான் ‘நிமிர்ந்து நில்’. சமுத்திரக்கனி இயக்கும் இந்தப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக அமலா பால், மேக்னா ராஜ் இருவரும் நடிக்கிறார்கள். அதுமட்டுமின்றி சரத்குமார், விஜய் டிவி கோபிநாத் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
‘ஆதிபகவன்’ படத்தை தொடர்ந்து இந்தப்படத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் ஜெயம் ரவி. குறிப்பாக 48 வயதான நரசிம்ம ரெட்டியாக நடித்திருக்கும் இவரது கதாபாத்திரம் மிரட்டலாக இருக்கும் என்பது ட்ரெய்லரை பார்த்தாலே தெரிகிறது. இதன் தெலுங்குப்பதிப்பான ‘ஜண்டாபாய் கபிராஜூ’வில் நானி ஹீரோவாக நடிக்கிறார். இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
‘நிமிர்ந்து நில்’ படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப்படத்தை வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.