
வசந்தமணி என்பவர் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘வெற்றிவேல்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப்படத்தில் மியா ஜார்ஜ், நிகிலா விமல், வர்ஷா என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளார்கள். அமர காவியம் நாயகி மியா ஜார்ஜை நமக்கு நன்றாக தெரியும்.. சரி யார் இந்த நிகிலா விமல்..?.
கடந்தவருடம் திலீப் ஜோடியாக ‘லவ் 24×7’ என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் இவர்… அந்தப்படத்தில் இவர் வரும் காட்சிகளில் எல்லாம் அலுப்புத்தட்டாமல் பார்க்கவைத்தது இவரது முகம் தான். மலையாள நடிகை காவ்யா மாதவனையும் மதுபாலாவையும் மிக்ஸ் பண்ணினால் ஒரு உருவம் கிடைக்கும் அல்லவா..? அதுதான் நிகிலா விமல். பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல அழகு கொஞ்சுகிறது முகத்தில்… நடிப்பும் நன்றாகவே இருக்கிறது.
தமிழில் ஏற்கனவே இரண்டு படங்களில் இவர் நடித்திருந்தாலும் இன்னும் ஒன்றுகூட திரைக்கு வரவில்லையாம். வெற்றிவேல் படம் தனக்கு நல்ல அடையாளத்தை தரும் என நம்பும் இவர் தமிழில் நடிப்பதற்காக தமிழை நன்றாக வாசிக்க, எழுத, பேச கற்றுக்கொண்டுள்ளாராம்.. இந்தப்படத்தில் இவர் சஸ்பென்ஸ் நிறைந்த ஒரு கேரக்டராக நடித்துள்ளாராம்.
Comments are closed.