செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘என்.ஜி.கே’. அரசியல் திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கின்றனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு இரவு பகலாக நடந்து வருகிறது.
இப்படம் ஆரம்பிக்கும் போதே தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது தீபாவளி அன்று ரிலீஸ் இல்லை என்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது
இந்தப்படம் பிரமாண்டமான முறையில் அதே சமயம் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் தயாராகி வருவதால் அதற்கான பணிகளை முடிப்பதற்கு கொஞ்சம் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனாலேயே படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. அதிகாரப்பூர்வமான ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Comments are closed.