“நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் 20 நிமிட காட்சிகளை வெட்டினார் சுசீந்திரன்..!

107

nenjil-thunivirunthal-movie 1

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில் துணிவிருந்தால் நவம்பர் 10 கடந்த வெள்ளி கிழமை அன்று வெளியாகி திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந், ஹரிஷ் உத்தமன், மெஹ்ரீன், ஷாதிகா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ திரைப்படத்தின் ரீ-எடிடட் வெர்சன் இன்று முதல் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படுகிறது. காரணம் படத்தின் ஆரம்ப காட்சிகள், அதாவது சந்தீப்-மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்துடன் ஒட்டாமல் இருந்தன.

இது படத்தின் வேகத்தை குறைப்பதாக விமர்சகர்கள், மக்களின் கருத்து மற்றும் நலம் விரும்பிகள் கருத்துக்களை கூறிவருவதால், அதை கருத்தில் கொண்டு நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்பட குழு கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கியுள்ளது.

இது பற்றி இயக்குநர் சுசீந்திரன் கூறும்போது, “நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் இருபது நிமிடத்தை நாங்கள் நீக்கி உள்ளோம். கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளது. நாங்கள் 15 நாட்கள் மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினோம். மெஹ்ரீன் நடித்த காட்சிகளை சூழ்நிலை காரணமாக நீக்கினோம். இதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்

அதுமட்டுமல்ல படத்தில் இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தின் புதிய வெர்சன் இன்று நண்பகல் 12 மணி முதல் அனைத்து திரை அரங்குகளிலும் திரையிடப்பட்டு உள்ளது” என்றார் இயக்குநர் சுசீந்திரன்.

Comments are closed.