நகுலின் ‘செய்’ படத்தில் பிரபல பாகிஸ்தான் பாடகர்..!

142

pakistan singer in sei

நகுல் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘செய்’ படத்தில் இடம்பெறும் ‘இறைவா…’ என்ற சூஃபி பாடலை பாடியிருப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார் பாகிஸ்தான் பாடகரான ஆதிஃப் அலி. ஏற்கெனவே பல பாகிஸ்தானி பாடல்களையும், ஹிந்தி பாடல்களையும் ஆதிஃப் அலி பாடியிருக்கிறார் என்பதோடு, ராய் லக்ஷ்மி நடிப்பில் இந்தியில் உருவாகியிருக்கும் ‘ஜூலி 2’ படத்திற்கும் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் பாடகர் ஒருவர் தமிழில் பாடுவது இதுவே முதல்முறை என்பதை அறிந்த ஆதிஃப் அலி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இவருடன் இணைந்து ஹிந்துஸ்தானி பாடகரான சபதஸ்வரா ரிஷுவும் ‘இறைவா….’ பாடலை பாடியுள்ளார். கேட்டவுடன் அனைவருக்கும் பிடித்துப்போகும் பாடலாகவும், நீண்ட நாட்கள் ஒலிக்கும் பாடலாகவும் இந்த சூஃபி பாடல் இருக்குமென தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நிக்ஸ் லோபஸ் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். டிசம்பர் 8ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் வெளியாகவிருக்கிறது.

Comments are closed.