வெங்கடேஷை தமிழுக்கு இழுத்து வரும் ‘செல்வி’ நயன்தாரா..!

200

selvi

தெலுங்கில் பிரபல நடிகர்களின் படங்கள் ரிலீசாகும் அதேநாளில் அதை அழகு தமிழில் தமிழ்நாட்டிலும் பார்க்க முடிகிறது என்றால் அதற்கு இரண்டு பேர் தான் முக்கிய காரணம்.. ஒருவர் பத்ரகாளி பிலிம்ஸ் பிரசாத். மற்றவர் வசனகர்த்தா ஏ.ஆர்.கே.ராஜராஜா.

ஆம். ஏற்கனவே செல்வந்தன், பிரபாஸ் பாகுபலி, இது தாண்டா போலீஸ், மகதீரா, புருஸ்லீ, எவண்டா உட்பட ஏராளமான படங்களை தமிழ் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளனர் பத்ரகாளி பிலிம்ஸ் நிறுவனத்தினர். இந்தபடங்களுக்கு ரசிகர்கள் விரும்பும் தமிழ் வசனங்களுடன் தமிழாக்கம் செய்பவர் வசனகர்த்தா ஏ.ஆர்.கே.ராஜராஜா.

இவர்களது கூட்டணியில் அடுத்து தமிழில் நுழைய இருக்கும் படம் தான் ‘செல்வி’.. தெலுங்கில் வெங்கடேஷ்-நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘பாபு பங்காரம்’ படம் தன ‘செல்வி’யாக உருமாறியுள்ளது.. படத்தை மாருதி இயகியுள்ளார். தமிழ், மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலுமே ஆகஸ்ட்-12ஆம் தேதி இந்தப்படம் வெளியாகிறது.

பெரும்பாலும் மகேஷ்பாபு, ராம்சரண் ஆகியோரின் படங்களே தெலுங்கில் ரிலீசாகும் அதே நாளில் தமிழிலும் ரிலீஸாகி வந்தன.. ஆனால் நயன்தாரா புண்ணியத்தில் இப்போது வெங்கடேஷுக்கும் அந்த பாக்கியம் கிடைத்துள்ளது.

Comments are closed.