தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு நடிகர்கள், இயக்குனர்கள் என திரையுலகை சேர்ந்தவர்கள் தொடர்ந்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் நடிகைகள் தரப்பில் இருந்து அப்படி யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை.. அதே சமயம் ஜல்லிக்கட்டுக்கு எதிரான ‘பீட்டா’ அமைப்பில் உறுப்பினராக இருக்கிறார் என்கிற காரணத்தினாலேயே த்ரிஷா மீது கண்டன கணைகள் பாய்ந்தன.
இந்த நிலையில் முன்னணி நடிகையான நயன்தாரா ஜல்லிக்கட்டுக்கு தனது ஆதரவையும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடுபவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அதேசமயம் இதற்கெல்லாம் காரணமான பீட்டா அமைப்புக்கு நம் எதிர்ப்பையும் பலத்தையும் உணர்த்துவோம் என கூறியுள்ள நயன்தாரா, பிறப்பால் நான் மலையாளி என்றாலும் என்னை வாழவைத்தது இந்த தமிழ் மக்கள் தான்.. அவர்களுக்கு ஆதரவு தருவது என் கடமை என கூறியுள்ளார்.
நயன்தாராவின் ஆதரவுக்குரல் போராட்டத்துக்கும் போராடும் இளைஞர்களுக்கும் இன்னும் கொஞ்சம் வலு சேர்க்கும் என்பது உறுதி.

Comments are closed.