நயன்தாராவை மிரட்டியவருக்கு போலீஸாக புரமோஷன்..!

234

dora villain 1

முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்தி நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படம் டோரா. இந்தப் படத்தில் நயன்தாராவை மிரட்டு மூன்று வில்லன்களில் பவன் சர்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ஷான்.

மீண்டும் ஒரு காதல் கதை படத்தில் இஷா தல்வார் காதலனாக, தங்கமகன் படத்தில் எமி ஜாக்சனின் பாய்பிரண்டாக, கோ – 2 படத்தில் வில்லன் வேடம். தற்போது டோரா படத்தில் முக்கிய வில்லன் என படிப்படியாக முன்னேறியுள்ள ஷான்,. கடைசி வரை வில்லனாக நடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை என்கிறார்.

“மிகப்பெரிய ஹீரோயின் நயன்தாரா.. அவரை பார்ப்பதற்கே பல லட்சம் பேர் தவம் கிடக்கும்போது அவருக்கே நான் வில்லனாக நடித்தது எனக்கு மிகப்பெரிய அந்தஸ்தை ஏற்படுத்தி விட்டது. இந்த படத்தை பார்த்த பிறகு புதிய இயக்குனர் சஜோசுந்தர் இயக்கும் புதிய படத்தில் நான் போலீஸ் அதிகாரியாக பெரிய ரோலில் நடிக்கிறேன். தமிழ் ஹிந்தி என இரண்டு மொழிகளில் படம் தயாராகிறது” என்கிறார் பெருமையுடன்..

Comments are closed.