சவுண்ட் இன்ஜினியர் டைரக்சனில் நடிக்கிறார் நயன்தாரா..!

186

nayanthara

புதுப்பேட்டை, ஆடுகளம், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட நாற்பது படங்களுக்கு சவுண்ட் இன்ஜினியர் ஆக பணியாற்றியவர் பரத் கிருஷ்ணமாச்சாரி.. அத்துடன் இயக்குனர் மிஷ்கினிடம் யுத்தம் செய், முகமூடி, சவரக்கத்தி ஆகிய படங்களில் துணை இயக்குனராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்..

இவர் கதாநாயாகியை மையப்படுத்திய கதை ஒன்றை நயன்தாராவிடம் கூறியுள்ளார். அந்தக்கதை நயன்தாராவை ரொம்பவே ஈர்த்துவிட்டது.. படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதால் அந்தப்படத்தை தயாரிக்கும் நிறுவனத்தையும் இயக்குனருக்கு நயன்தாராவே அறிமுகப்படுத்தினாராம். இந்தப்படத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜர்னலிஸ்ட்டாக நயன்தாரா நடிக்கிறாராம். வரும் மார்ச் மாதம் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

Comments are closed.