மா.கா.பா ஆனந்தா..? கருணாகரனா..? ; ‘நவரச திலகம்’ யார்..?

250

Navarasa-Thilagam-Movie-Still
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுத்து ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தில் பின்னி பெடலெடுத்த மா.கா.பா.ஆனந்த் தற்போது நவரச திலகம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் இன்னொரு நாயகனாக கருணாகரன் நடித்துள்ளார். படத்தை அறிமுக இயக்குனர் காம்ரன் என்பவர் இயக்கியுள்ளார்.

ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கும் இந்த இருவரும் படும் பாட்டை காமெடியாக சொல்லியிருக்கிறார்களாம்.. படத்திற்கு இசையமைக்கும் விபின் சித்தார்த்தும் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதில் ‘நவரச திலகம்’ யார்..? மா.கா.பா ஆனந்தா..? கருணாகரனா..? என்பது வரும் பிப்-19ஆம் தெரிந்துவிடுமாம்.. ஆம் அன்றுதான் இந்தப்படம் ரிலீஸாகிறது.

Comments are closed.