
கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு, சந்தித்த வேளை ஆகிய படங்களை இயக்கிய ரவிச்சந்திரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி இருக்கும் படம் நட்பதிகாரம் 79. இதில் பிரபல தயாரிப்பாளர் மல்லியம் ராஜகோபால் மகன் ராஜ்பரத் கதாநாயகனாக அறிமுகமாகிறார். முன்பு ரவிச்சந்திரனை சினிமாவுக்குள் அழைத்து வந்தவரே அவரது மாமாவான இந்த மல்லியம் ராஜகோபால் தான்.
இது தவிர வல்லினம் படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்த அம்ஜத், தெலுங்கு நடிகை தேஜஸ்வி, ரேஷ்மி மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமான முறையில் வித்தியாசமாக சமீபத்தில் நடத்தினார்கள். திருவள்ளுவரை கவுரவப்படுத்தும் வகையில்தான் நட்பதிகாரம் 79 என தலைப்பு வைத்திருக்கிறார் இயக்குனர் ரவிச்சந்திரன்..
படத்தின் கதை..? நட்பும் காதல் போலத்தான், ஊடலும், கூடலும் நிறைந்தது. சின்ன சின்ன விஷயங்கள் கூட காயப்படுத்தும். இரண்டு இளைஞர்கள், இரண்டு இளைஞிகள் நட்பாக இருக்கிறார்கள். அவர்களின் திருமணத்திற்கு பிறகு அந்த நட்பு எப்படி கையாளப்படுகிறது என்பதுதான் கதையின் களம். திருமணத்துக்கு முன், திருமணத்துக்கு பின் என நட்பின் பரிமாணத்தை பேசுகிறது படம்.
தீபக் நீலாம்பூர் என்ற புதுமுகம் தான் இசை அமைத்துள்ளார். பல வருடங்களுக்கு முன் ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்த ஹாரிஸ் ஜெயராஜை அழைத்து வந்து இசை அமைப்பாளராக்கிய அதே ரூட்டில், இப்போதும் அதே ரகுமான் குரூப்பில் இருந்து இந்த தீபக் நிலாம்பூரை அழைத்து வந்து இசை அமைப்பாளராக்கி இருக்கிறார் ரவிச்சந்திரன்.. இவரும் ஹாரிஸ் போல பெரிய இடத்துக்கு வருவார். அதற்கான திறமை அவரிடம் இருக்கிறது என்கிறார் ரவிச்சந்திரன்.
Comments are closed.