‘நளனும் நந்தினியும்’ பின்னே நந்திதாவும்..!

95


யதார்த்தமான கதாபாத்திரம் என்றால் கூப்பிடு இவரை என்று சொல்லும் அளவுக்கு தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் வசீகரித்து விட்டார் அட்டகத்தி நந்திதா. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் பசுபதியின் விசாரணைக்கு இவர் பதில் சொல்லும் காட்சியில் சிரிக்காதவரும் உண்டோ.?. அதேசமயம் ‘எதிர்நீச்சல்’ படத்திலோ சீரியஸான கதாபாத்திரம்.. அதையும் கச்சிதமாக செய்திருந்தார் நந்திதா.

தற்போது லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கும் ‘நளனும் நந்தினியும்’ படத்தில் இதுபோன்ற முக்கியமான கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் நந்திதா. மைக்கேல் கதாநாயகனாக நடிக்கிறார். இவர்களுடன் சூரி, ஜெயபிரகாஷ், அழகம்பெருமாள் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

அஸ்வத் இசையமைக்கும் இந்தப்படத்தின் பாடல்களை கங்கை அமரன், மதன்கார்க்கி, நிரஞ்சன்பாரதி ஆகியோர் எழுதியுள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஆர்.வெங்கடேசன்.

Leave A Reply

Your email address will not be published.