திலீப்-பிருத்விராஜ் பட இயக்குனர் டைரக்சனில் நகுல் நடிக்கும் ‘செய்’..!

217

sei 1

ஒரு சிறிய இடைவெளிக்குப்பிறகு நகுல் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘செய்’.. இந்தப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை ராஜேஷ் கே.ராமன் எழுத, மலையாள இயக்குநர் ராஜ்பாபு இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இவர் மலையாளத்தில் திலீப்-பாவனா நடித்த செஸ், மற்றும் பிருத்விராஜ், ஜெயராம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியவர். இந்தப்படத்திற்கு நிக்ஸ் லோபஸ் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில் நடிகர் நகுல் பேசுகையில்,‘ ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் நடித்திருக்கும் படம் செய். இதில் சரவெடி சரவணன் என்ற கேரக்டரில் நடிக்கிறேன். அனைத்து கமர்சியல் எலிமெண்ட்டுகளும் சரியான அளவில் இருக்கும் ‘நடிகா நடிகா..’ எனத் தொடங்கும் பாடலை, 15000 அடி உயரத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும் இடத்தில் வைத்து படமாக்கினார்கள். அந்த காட்சி படமாக்கப்படும் போது கடினமாக இருந்தது. ஆனால் காட்சியாக பார்க்கும் போது வியப்பாக இருந்தது. மனதிற்கு திருப்தியாக இருந்தது. இயக்குநர் ராஜ்பாபு சார் ஸ்பாட்டில் என்ன தேவையோ அதை மனதிற்குள்ளேயே எடிட் செய்து படமாக்கியது அவரது அனுபவத்தை எடுத்துக் காட்டியது” என்றார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசுகையில், “இந்த படத்தில் ‘நடிகா நடிகா’ என தொடங்கும் பாடலை எழுதியிருக்கிறேன். இசையமைப்பாளர் நிக்ஸ் புதுமுகமாக இருந்தாலும் அவரிடம் ஒரு மெச்சூரிட்டி இருக்கிறது.. இந்த படத்தில் நான் எழுதிய பாடலின் பின்னணியை இயக்குநர் விவரிக்கும் போது, ஒரு நடிகனுக்கும் இயக்குநருக்கும் உள்ள அன்னியோன்யம் போல் ஒரு காதலருக்கும் காதலிக்கும் இருக்கிறது என்றார். காதலியை இயக்குநராகவும், காதலனை நடிகராகவும் கற்பனை செய்து பாடல் எழுதியிருக்கிறேன். இதனை படமாக்கிய விதமும் கவனம் ஈர்க்கக்கூடியதாக இருந்தது” என பாராட்டினார்.

Comments are closed.