சரியாக 85 நாட்கள்.. தனுஷ் விட்டிருக்கும் இடைவெளி சரியான ஒன்றுதான். குழம்பவேண்டாம்.. தனுஷ் நடித்த மரியான் படம் ரிலீஸாகி வரும் அக்டோபர்-10ஆம் தேதியோடு 85 நாட்கள் முடிகிறது. வழக்கமாக 100 நாட்கள்தானே கணக்கு.. இதென்ன 85 நாட்கள் என்கிறீர்களா? அக்டோபர் 10ஆம் தேதியன்றுதான் தனுஷின் அடுத்தபடமான நய்யாண்டியை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்களாம். சற்குணம் இயக்கத்தில் தனுஷ், நஸ்ரியா நடித்துள்ள இந்தப்படம் கிராமமும் நகரமும் கலந்த பின்னணியில் படமாக்கப்படிருக்கிறது.