நடிகர் சங்கத்திற்கான புதிய அணி பொறுப்பிற்கு வந்தபின் நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டடம் கட்டுவதற்கான வேலைகளை தீவிரப்படுத்தியது.. சமீபத்தில் பூமி பூஜை செய்யப்பட்டு கமல், ராஜின் ஆகியோரால் அடிகளும் நாட்டப்பட்டது.. இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் புதிய கட்டிடம் கட்டுவதற்கான டென்டர் பொது அறிவிப்பு நேற்று நாளிதழ்களில் விளம்பரப்படுத்தபட்டது.
அதன் அடிப்படையில் நடிகர் சங்கம் அலுவலகத்தில் அறங்காவலர் குழ உறுப்பினர்கள் கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோர் முன்னிலையில் ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி K.வெங்கட்ராமன் அவர்களும் ஓய்வு பெற்ற பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் S.திருமாறன் அவர்களும் டென்டர் பெட்டியை சீல் வைத்தனர்
நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த டென்டருக்கான தேதி, மே 8-ம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.. விருப்பமுள்ள நிறுவனங்கள் டென்டர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து டென்டர் பெட்டியில் போடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Comments are closed.