வறுமையில் வாடும் ரங்கம்மா பாட்டிக்கு நடிகர் சங்கம் உதவி..!

217

rangamma paatti

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் பாட்டியாக நடித்து புகழ் பெற்றவர் திருமதி ரங்கம்மாள் பாட்டி. வடிவேலுவின் படங்களில் அடிகடி இவரை பார்க்கலாம். ஒரு படத்தில் வடிவேலுவை பார்த்து “போறப்போ அந்த நாயை ச்சூன்னு பத்திட்டு போ” என கூறி அவரை நாய்க்கடி வாங்க வைப்பாரே அவரே தான்.

இவர் தமிழ் திரைப்படங்களில் அவ்வபோது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன் மூலம் வரும் 500ரூபாயை கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். சில நாட்களுக்கு முன்பு ரங்கம்மாள் பாட்டி மெரீனா கடற்கரையில் பிச்சை எடுத்து வந்ததாக செய்தி ஒன்று பரவி வந்தது. இந்த தகவல் அறிந்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள். அவரை பற்றி விசாரித்து மெரினா கடற்கரைக்கு பாட்டியை தேடி சென்றனர்.

அங்கே சென்ற போது தான் ரங்கம்மாள் பாட்டி பிச்சை எடுக்கவில்லை என்பதும். படபிடிப்பு தளத்தில் அவருக்கு கிடைத்த 500ருபாய் போதாததால் மெரினா கடற்கரையில் சில எலெக்ட்ரானிக் பொருட்களை அங்கே விற்று அதன் மூலம் வரும் வருவாயை கொண்டு வாழ்கையை நடத்தி வந்திருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது.

எனவே தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு உதவி தொகையாக ரூபாய் 5000 வழங்கியது. ரங்கம்மாள் பாட்டி FEFSI அமைப்பின் கீழ் உள்ள ஜூனியர் ஆர்டிஸ்ட் சங்கத்தின் உறுப்பினர். ஒருவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராக இருந்தால் மட்டும் தான் சங்கத்தின் மூலம் அவருக்கு உதவி தொகையை வழங்க முடியும்.

ஆனால் பாட்டியின் வறுமையை கருத்தில் கொண்டு தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு இந்த உதவியை செய்துள்ளது. மேலும் அவருக்கு எந்த வகையில் உதவலாம் என்பதை நடிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

Comments are closed.