மீண்டும் சினிமா பின்னணி கதையில் ஹீரோவான பார்த்திபன் பட நாயகன்..!.

225

naan avalai santhithapothu 2

பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நாயகனாக நடித்த சந்தோஷ் பிரதாப், தற்போது ‘நான் அவளை சந்தித்த போது’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.. சினிமா பின்னணியை கொண்ட இந்த படம், அம்மா செண்டிமென்ட், காதல் கலந்த படமாக உருவாக்கப்பட உள்ளது ஆச்சர்யமாக இவரது முதல் படத்திலும் கூட சினிமா பின்னணியில் தான் கதை பின்னப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். ‘மாசாணி’, பரத் நடித்த ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ போன்ற படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர் இந்தப்படத்தை இயக்குகிறார். இன்னொரு முக்கிய விஷயம் மலையாள குணச்சித்திர நடிகரும், மலையாள நடிகர்சங்க தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான இன்னசன்ட் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Comments are closed.