மைசூர் அரண்மணையில் ரஜினிக்கு அனுமதி கிடைக்குமா..?

155

சூப்பர்ஸ்டாரின் பெரும்பாலான படங்களின் படப்பிடிப்பு மைசூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடைபெறுவதுதான் வழக்கம்.. காரணம் ரசிகர்களின் தொந்தரவு இல்லாமல் படப்பிடிப்பு நடத்தலாம்.

இப்போது ‘லிங்கா’ படப்பிடிப்பும் இங்கேதான் நடக்கிறது. இதில் குறிப்பாக மைசூர் மகராஜா அரண்மனையில் பல காட்சிகளை படமாக்க முடிவுசெய்துள்ளாராம் கே.எஸ்.ரவிகுமார். அதற்கான அனுமதிக்கான அரணமனை தரப்பினரை அணுகியிருக்கிறார்கள்.

ஆனால் அரண்மனை தரப்பினரோ தற்போது இதன் நிர்வாகம் கர்நாடக அரசு கையில் இருக்கிறது. அதனால் அரசின் அனுமதி இருந்தால் மட்டுமே அரண்மனை மற்றும் அதைச்சுற்றி இப்போதும் வசித்துவரும் அரசகுடும்பத்து பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த முடியும் என்று சொல்லிவிட்டார்களாம்.

Comments are closed.