முயல் – முன்னோட்டம்

104

லக அளவில் முதல்முறையாக அனைத்து போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் இணைந்து பி அண்ட் வி எண்டர்டெய்ன்மென்ட் பி.லிட் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் படம் தான் ‘முயல்’.

இப்படத்தில் யோகன், பிரபு சேக்கிழார் ஆகியோர் ஹீரோவாக அறிமுகமாகிறார்கள். அவர்களுக்கு ஜோடியாக ‘பேராண்மை’ படத்தில் நடித்த சரண்யா, தர்ஷணா மற்றும் ஆராதிகா ஆகியோர்  நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் ராஜ்குமார், மீராகிருஷ்ணன், நெல்லைசிவா, முத்துக்காளை, ரஞ்சனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதுவரை தங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு துன்பத்தையுமே பார்த்திராத எப்போதுமே சந்தோஷமாக இருக்கும் மூன்று கல்லூரி நண்பர்கள் தங்கள் படிப்பை முடித்துவிட்டு ஏதாவது ஒரு பிஸினஸ் செய்யலாம் என்று கிளம்புகிறார்கள். அப்போது அவர்களது வாழ்க்கையை ஒரு மிகப்பெரிய சம்பவம் புரட்டிப் போடுகிறது.

அதனால் பாதிக்கப்படும் அவர்கள் இனிமேல் யாருக்கும் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை வரக்கூடாது என்று முடுவெடுத்து அதற்காக தீர்வைத் தேடிப் போவது தான் இப்படத்தின் கதை.

காதல்,நகைச்சுவை,செண்டிமென்ட்,சண்டைக்காட்சிகள் என ஒரு கமர்ஷியல் கலவையாக இப்படத்தை இயக்கியிருக்கிறார் ‘ஒளிப்பதிவாளர்’ எஸ்.பி.எஸ்.குகன்.

இவர் ஏற்கனவே தமிழில் வெற்றிகரமாக ஓடிய ‘மதுரை டூ தேனி வழி : ஆண்டிபட்டி’ மற்றும் உலக சினிமாவில் முதல் முறையாக ஸ்டில் கேமராவில் முழுப்படத்தையும் ஒளிப்பதிவு செய்து லிம்கா மற்றும் எலைட் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற ‘சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி’ படங்களை தயாரித்து ஒளிப்பதிவு செய்தவர்.

இவர் முதல்முறையாக இந்த ‘முயல்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாவதோடு மட்டுமில்லாமல் படத்தில் இடம்பெற்ற போஸ் என்ற போட்டோகிராபர் கேரக்டரிலும் நடித்திருக்கிறார்.

படத்தில் ஹீரோயின்கள் சரண்யாவும், ஆராதிகாவும் ஆக்‌ஷன் பிரகாஷ் அமைத்த புதுமையான சண்டைக்காட்சிகளில் துணிந்து நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்திற்காக மணப்பாறை அருகிலுள்ள வீராப்பூர்  ‘பொன்னர்-சங்கர்’ கோவில் திருவிழாவில்  8 கேமராக்கள் கொண்டு படப்பிடிப்பு நடத்ப்பட்டுள்ளது. சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொண்ட இந்த பிரம்மாண்டமான கோவில் திருவிழா தமிழ்சினிமாவில் முதல்முறையாக ‘முயல்’ படத்தில் தான் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு மதுரை,சென்னை,கேரளா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.

எஸ்.பி.எஸ் குகன்  மற்றும் எம்.ஆர்.சரவணக்குமார் ஒளிப்பதிவு செய்ய படத்தின் பாடல்களை தமிழ்ச்செல்வன், செல்வராஜா, சீதாராமன், சிவக்குமார், எஸ்.பி.எஸ்.குகன்  ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

ஜே.வி இசையமைக்க, ராதிகா நடனம் அமைக்க, சண்டைக்காட்சிகளை ‘ஆக்‌ஷன்’பிரகாஷ் கையாண்டிருக்கிறார். வியாபார நிர்வாகத்தை ஆர்.ரவிச்சந்திரன் மேற்கொள்கிறார்.

தயாரிப்பு நிர்வாகம் : ஆத்தூர் ஆறுமுகம், தயாரிப்பு : பி அன்ட் வி எண்டர்டெய்ன்மென்ட் பி.லிட்.
கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம் : எஸ்.பி.எஸ்.குகன்.

Leave A Reply

Your email address will not be published.