
கடந்த 2014ல் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘வெள்ளிமூங்கா’ படம் 3 கோடியில் எடுக்கப்பட்டு 2௦ கோடி சம்பாதித்தது. அதில் நாற்பது வயதாகியும் திருமணமாகாத, அரசியலில் எப்படியாவது முன்னேற துடிக்கின்ற, குறிப்பாக 22 வயது இளம்பெண்ணை அதுவும் தன் கூட படித்த தோழியின் மகளை காதலிக்கின்ற ஹீரோவாக, அரசியல்வாதி கதாபாத்திரத்தில் பிஜுமேனன் அட்டகாசமாக பொருந்தியிருந்தார்.
தமிழில் இதே கேரக்டரை தான் நடித்தால் செட்டாகும் என நினைத்த சுந்தர்.சி அதை தனது உதவியாளர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் ‘முத்தின கத்திரிக்காய்’ என்கிற பெயரில் தற்போது ரீமேக் செய்து நடித்துள்ளார். அரண்மனை-2’ படத்தை தொடர்ந்து இந்தப்படத்திலும் சுந்தர்.சிக்கு ஜோடியாக நடிக்கிறார் பூனம் பஜ்வா.
வெள்ளிமூங்கா படத்தின் ஒன்லைனை மட்டும் எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டு அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு கதையை அப்படியே மாற்றி படமாக்கியுள்ளார்களாம். அனேகமாக ஜுன்-10ஆம் தேதி இந்த முத்தின கத்திரிக்காய் கடைத்தெருவுக்கு (தியேட்டர்களுக்கு) வந்துவிடும் என தெரிகிறது.
Comments are closed.