மம்முட்டி வீட்டில் ரம்ஜான் கொண்டாடினார் மோகன்லால்..!

263

சினிமாவில் மாற்றமுடியாத சில சாபக்கேடுகள் இருந்தாலும் ஒவ்வொரு மொழி சினிமாவிலும் உச்சத்தில் இருக்கும் இருக்கும் சூப்பர் ஸ்டார்கள் மட்டும் எப்போதும் நட்புடன் இருப்பது சினிமா வாங்கி வந்த வரம்.. அந்த வகையில் எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், ஏன் இப்போது விஜய்-அஜீத்  எல்லாம் திரையுலகில் போட்டியாளர்களே தவிர சினிமாவைத்தாண்டிமனம்விட்டு பேசக்கூடிய நல்ல நண்பர்கள்தான்.

அதேபோலத்தான் கேரளாவிலும் மம்முட்டி, மோகன்லாலின் ரசிகர்கள் எதிர் எதிரான மன நிலையில் இருந்தாலும் அவர்கள் இருவரும் எப்போதும் தங்கள் நட்புக்குள் விரிசல் விழ வாய்ப்பளித்ததில்லை.. அதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் விதமாக நேற்று மம்முட்டியின் வீட்டுக்கு சென்று அவர்கள் குடும்பத்துடன் ரம்ஜான் பண்டிகை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் மோகன்லால்..

Comments are closed.