
எம்.ஜி.ஆர் நடித்த ஹிட் படங்கள் அவ்வப்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரிலீஸாகி இப்போதும் கூட 100 நாட்கள் ஓடும் அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றன. எம்.ஜி.ஆர். நடித்து 1971-ம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றி பெற்ற படம் ‘ரிக்ஷாக்காரன்’. இந்தப் படத்தை சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்தார். 45 ஆண்டுகளுக்கு பின் டிஜிட்டல் முறையில் இப்படம் உருவாக்கப்பட்டு விரைவில் திரைக்கு வருகிறது. இதற்கான ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் தேவி தியேட்டரில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது..
எந்த அளவுக்கு எம்.ஜி.ஆர் ரசிகர்கள் துடிப்புடன் தங்களது புரட்சித்தலைவர் படத்தை வரவேற்க தயாராக இருக்கிறார்கள் என்பதை நேரடியாகவே காண முடிந்தது. 1971-ம் ஆண்டு ‘தேவி’ தியேட்டரில் இந்தப்படம் வெளியானபோது ஓப்பனிங் ஷோ பார்த்தேன் தம்பி என் அ ஒரு பெரியவர் காலரை தூக்கிவிட்டுக்கொண்டே சொன்னதுதான் மிகப்பெரிய ஆச்சர்யம்.
இந்தப்படத்தை அப்போது தயாரித்து வெளியிட்ட சத்யா மூவிஸ் தயாரிப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் இந்த விழாவுக்கு தலைமை தாங்கினார். அவர் பேசும்போது “அப்போது இந்தப் படத்தை நான் தயாரித்திருந்தாலும் இப்போது தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட இப்படத்தின் சில காட்சிகளைப் பார்க்கும்போது நான் தயாரித்த படமா என்று எனக்கே சந்தேகமாக உள்ளது. படத்தின் வெற்றிக்கு இசை உட்பட எல்லா அம்சங்களும் காரணமாக இருந்தாலும் முக்கியமான காரணம் எம்.ஜி.ஆர்” என கூறினார் ஆர்.எம்.வீரப்பன்.
Comments are closed.