எம்.ஜி.ஆரின் பேரன் நடிக்கும் ‘தாத்தா காரை தொடாதே’..!

255

இயக்குனர் ரஷீத் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘தாத்தா காரை தொடாதே’. இப்படத்தில் ராபர்ட் மாஸ்டர், எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் ஆகியோர் பலர் நடிப்பதாக கூறப்படுகிறது. ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.

ஒரு காரை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் டைட்டிலை வைத்து பார்க்கும் பொழுது, மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய காரை மையப்படுத்தி தான் இந்தப்படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது.

Comments are closed.