மெட்ரோ சிரிஷ் நடிக்கும் புதிய படம் ‘பிஸ்தா’..!

278

pistha

‘மெட்ரோ’ படத்தில் நடித்த சிரிஷ் கதாநாயகனாக நடிக்க உள்ள புதிய படத்திற்கு ‘பிஸ்தா’ என டைட்டில் வைத்துள்ளார்கள். ரொம்ப குழம்பவேண்டாம்.. இருபது வருடங்களுக்கு முன் கே.எஸ்.ரவிக்குமார்-கார்த்திக் கூட்டணியில் வெளியான ஹிட் படம் தான் பிஸ்தா.

இருபது வருடம் ஆகிவிட்டாலே ஒரு ஹிட் படத்தின் டைட்டில் மீண்டும் ஒருமுறை இன்றைய ட்ரென்ட் படங்களுக்கு வைக்கப்படுவது வழக்கமாகி விட்டது தானே.. அந்தவகையில் இப்போது இந்த டைட்டிலை (மட்டும்) கைப்பற்றியுள்ளார்கள். படத்தின் கதாநாயகிகளாக சைத்தான் ‘அருந்ததி நாயர் மற்றும் மலையாளத்தில் ‘ஆயாள் ஞானல்ல’ படத்தில் பஹத் பாசில் ஜோடியாக அறிமுகமான மிருதுளா முரளியும் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்கள்..

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தில் சதீஷ், யோகிபாபு மற்றும் சென்றாயன் என மூன்று நகைச்சுவை நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.. இந்தப்படத்தை இயக்கம் ரமேஷ் பாரதி வேறு யாருமல்ல, சிரிஷ் நடித்த மெட்ரோ படத்தின் எடிட்டராக பணியாற்றியவர் தான்..

“டைரக்சனில் ஆர்வமுள்ள ரமேஷ் பாரதி, ‘மெட்ரோ’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துகொண்டு இருந்தபோதே இந்த கதையை என்னிடம் கூறினார்.. அது என்னை மிகவும் ஈர்த்தது. அதனால் கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் உடனடியாக பிடித்துக்கொண்டேன்” என்கிறார் சிரிஷ். இந்தப்படத்திற்கு இசையமைக்கும் தரண்குமாருக்கு இது 25வது படமாகும்.

கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பை கும்பகோணம் மற்றும் காரைக்குடி பகுதிகளில் நடத்தவுள்ளனர்..

Comments are closed.