ஜெயராம் மகன் பட ஆடியோவை வெளியிட்டார் சூர்யா..!

202

Meen-Kuzhambum-Manpanayium audio
மலையாள நடிகர் என பிரித்துப்பார்க்க முடியாதபடி நம் தமிழ்சினிமாவுக்குள் ஒன்றிவிட்டவர் நடிகர் ஜெயராம். அவரது மகன் காளிதாஸை தமிழில்தான் அறிமுகப்படுத்துவேன் என அடம்பிடித்து, ஒருபக்க கதை படத்தில் நடிக்கவைத்தார் ஜெயராம்..

அந்தப்படம் வெளியாகும் முன்னரே காளிதாஸுக்கு ‘மீன் குழம்பும் மண்பானையும்’ என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது.. சிவாஜி பேரன் துஷ்யந்த தயாரிக்கும் இந்தப்படத்தில் பிரபு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கதாநாயகியாக ஆஷ்னா ஜவேரி நடிக்கிறார்.

இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.. இதில் சிறப்பு விருந்தனராக கலந்துகொண்ட சூர்யா படத்தின் இசைத்தகட்டை வெளியிட்டார். விழாவில் படக்குழுவினர் தவிர, விக்ரம்பிரபு, இசையமைப்பாளர் இமான், நடிகர் பிரதாப் போத்தன், பிவாசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வரும் ஜுன்-10ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாக இருக்கிறது..

Comments are closed.