
இது பேய்ப்படமா..?
ஆமாம்
இப்போதுதான் நிறைய பேய்ப்படங்கள் வருகின்றனவே.?
இது கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கிறது..
அதென்ன..?
கதைக்குள் பேயை நுழைத்த விதம்..
பழிவாங்கலா..?
அதுவும் இருக்கிறது
அதையும் தாண்டி..?
தாய்க்கும்.. ஸாரி.. பேய்க்கும் மகளுக்குமான பாசம்..
யார் நடிப்பு சூப்பர்.?
சந்தேகமென்ன.. நயன்தாரா தான்..
ஆரி..?
பொருத்தம் ப்ளஸ் கச்சிதம்
மைம் கோபி..?
கிரிமினல் டைரக்டர் (படத்தில்)
‘கள்ளப்படம்’ லட்சுமி பிரியாவுக்கு என்ன வேலை..?
மைம் கோபியிடம் உதவி இயக்குனர். நயன்தாராவின் தோழி..
ரோன் எதன் ரோஹனின் இசை..?
மிரட்டல்.. பின்னணி இசையில்
சத்யன் சூர்யனின் ஒளிப்பதிவு..?
பேய் இல்லாத நேரங்களிலும் பயம் காட்டுகிறது.
இயக்குனர் அஸ்வின் சரவணன்…?
தெரிந்த கதை.. புதிய களம்…. புது முயற்சி…
வெற்றிப்பாதைக்கு திருப்பி விடப்பட்டுள்ளார்.
Comments are closed.