
லிங்கா.. ம்ம்ஹூம்.. அதையெல்லாம் மறந்துருங்க.. இவர் புது ரஜினி.. ஒரு ரசிகனாகவும் ஒரு இயக்குனராகவும் இயக்குனர் ரஞ்சித், பார்த்து பார்த்து வடிவமைத்துள்ள புத்தம் புது ‘கபாலி’ ரஜினி.. நேற்று காலை பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு பூஜையும் போடப்பட்டு அமர்க்களமாக துவங்கியுள்ளது ‘கபாலி’ படப்பிடிப்பு.
இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போதும் பூஜையில் கலந்துகொண்ட சூப்பர்ஸ்டாரின் ஹேண்ட்சம் லுக்கையும் பார்க்கும்போது ரஜினி படங்களை இது வேற மாதிரி என்றே நினைக்க தோன்றுகிறது. கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப் படத்திற்காக கிட்டத்தட்ட நூறு நாட்களுக்கு மேல் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் சூப்பர்ஸ்டார்.
Comments are closed.