“மே-9ல் ‘கோச்சடையான்’ ரிலீஸ் உறுதி” – லதா ரஜினிகாந்த்

176

மே-9ஆம் தேதி ‘ கோச்சடையான்’ ரிலீஸ் என விளம்பரங்களும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுகொண்டிருக்க, இன்னொரு புறம் தயாரிப்பாளரின் முந்தைய பட வினியோக பிரச்சனையால் ‘கோச்சடையான்’ சொன்ன தேதியில் வெளியாவதில் சிக்கல் என்றும் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

“ஆனால் இது எதையும் நம்பாதீர்கள்.. ஏற்கனவே திட்டமிட்டபடி மே-9ஆம் தேதி ‘கோச்சடையான்’ ரிலீஸாகும்.. அதில் எந்த மாற்றமும் இல்லை” என விளக்கம் அளித்திருக்கிறார் லதா ரஜினிகாந்த்.

ரஜினியின் மனைவியே சொல்லிவிட்டதால் சூப்பர்ஸ்டாரின் ரசிகர்களும் எப்படி பிளஸ்-2 ரிசல்ட் 9ஆம் தேதி வெளியாவது உறுதியோ அதேபோல தங்களது தலைவர் படமும் கட்டாயம் ரிலீஸாகும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

Comments are closed.