கிட்டத்தட்ட 30 வருடங்களாக சினிமாவில் நடிகராக வலம்வரும் ஆனந்த்ராஜ் இன்னமும் அதே பொலிவுடன் ரொம்பவும் இளமையாக இருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான ‘நானும் ரவுடி தான்’ படத்தில்அவரது காமெடி மிகவும் ஹைலைட்டாக அமைந்தது.. அதற்குப்பிற்கு இப்போது மரகத நாணயம் படத்தில் அவரது காமெடி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது..
இந்தப்படம் வெற்றி பெற்றதற்கான நன்றி அறிவிப்பு விழாவில் கலந்துகொண்டு நன்றி தெரிவித்த ஆனந்தராஜ் தனது இளமை ரகசியம் குறித்தும் வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறும்போது “சமீபத்தில் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்தேன். அவர் என்னை பார்த்து எப்படி இன்னும் இப்படியே இளமையாக இருக்கிறீர்கள் என்று கேட்டார். மது, சிகரெட்டை தொட்டதில்லை. அது தான் காரணம். 30 வருடங்களாக நடித்து வருகிறேன். இப்போது இளம் நடிகர்களோடு தொடர்ந்து நடித்து வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் தொடர்ந்து 20 வருடங்கள் நடிக்கவே ஆசைப்படுகிறேன்” என்றார்.

Comments are closed.