இதுவும் நஸ்ரியா-பகத் பாஸில் பற்றிய செய்திதான்.. இவர்கள் இருவரும் இணைந்து தற்போது அஞ்சலிமேனன் இயக்கிவரும் ‘பெங்களூர் டேய்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இந்தப்படத்தில் நடிக்க ஆரம்பித்தபோதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்தது.
இப்போது மீண்டும் இவர்கள் இருவரையும் ஜோடி சேர்த்து இன்னொரு படம் உருவாக இருக்கிறது. படத்தின் பெயர் மணிரத்னம்(Money Ratnam). ஆனால் நம்ம இயக்குனர் மணிரத்னத்துக்கும் இந்தப்பெயருக்கும் துளியும் சம்பந்தம் இல்லை.
படத்தின் கதையை ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக உருவாக்கியிருக்கிறார்களாம். ஆடி கார் ஷோரூமில் எக்ஸிக்யூட்டிவ் ஆக வேலைபார்க்கும் பகத் பாஸிலும் அவரது காதலியான நஸ்ரியாவும் ஒரு நாளில் சந்திக்கும் நிகழ்வுகள் தான் படத்தின் கதை.
ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை வைத்து சமீபத்தில் தான் மலையாளத்தில் அதுவும் பகத் பாஸில் நடிப்பில் ‘நார்த் 24 காதம்’ என்ற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.